தெலுங்கானா கவர்னராக தமிழிசை நியமனம்..
தெலுங்கானா மாநிலத்தின் கவர்னராக தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தற்போது தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கேரளா மாநிலத்தின் ஆளுநராக ஆரிப் முகமது, ஹிமாச்சல் பிரதேசம் ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பகத் சிங் கோஷ்யாரி, மஹாராஷ்டிரா ஆளுநராகவும், கல்ராஜ் மிஸ்ரா ராஜஸ்தான் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டியில், எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத பதவி கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன் வகித்து வந்த மாநில பாஜக தலைவர் பதவி, டிசம்பர் மாதத்தோடு முடிவடைவதால், அதன் பிறகு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது. தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு எம்.பி.கனிமொழி, டிடிவி தினகரன் ஆகியோர் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.