திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (15:35 IST)

தடுப்பூசி செலுத்துவதில் அரசு தனிக் கவனம் செலுத்தவேண்டும்- விஜயகாந்த்

தமிழகத்தில் மீண்டும் கொரொனா பரவாமல் தடுக்க தடுப்பூசி செலுத்துவதில் அரசு தனிக் கவனம் செலுத்தவேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உலகளவில் கொரொனா தொற்றுகுறைந்துவரும்  நிலையில்,சீனாவில் பல நகரங்களில் மீண்டும் கொரொனா தொற்று அதிகரித்து வருகிறது. இது வேகமாகப் பரவி வரும் நிலையில் உலகெங்கும் கொரொனா தொற்றுப் பரவிவருவதாக தகவல் வெளியாகிறது.

இந்தியாவில்  கொரொனா வைரஸ் தொற்று தற்போது குறைந்துவரும் நிலையில் தொற்றுப் பாதிப்பு வேகம் அதிக்கும் என  ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,  ரொனா பரவாமல் தடுக்க தடுப்பூசி செலுத்துவதில் அரசு தனிக் கவனம் செலுத்தவேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார. அதில், சீனா ,மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளி நாடுகளிலும் கேரளா உள்ளிட்ட அண்டை  மா நிலங்களிலும் மீண்டும் கொரொனா வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பரவாமல் தமிழக அரசு முன்னெச்சரிக்கை  நடவடிக்கை எடுக்க வேண்டும். மெத்தனம்  காட்டாமல் சிறுவர் முதல்  முதியவர்கள் வரை தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.