1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Supreme court allowed reservation for govt doctors

அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு! – அனுமதி அளித்த உச்சநீதிமன்றம்!

Tamilnadu
தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளுக்கு அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பில் தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் சேர 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய அரசாணை செல்லும் என்று உத்தரவிட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் தகராறு! கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய ஆசாமிகள்!