1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 13 ஜூன் 2024 (18:03 IST)

21 முறை ஓம் ஸ்ரீராம் என எழுதி பதவியேற்பு..! வைரலாகும் மத்திய அமைச்சரின் செயல்..!!

Telungana Minister
தெலுங்கு தேசம் கட்சியின்  கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்கும் போது 21 முறை 'ஓம் ஸ்ரீராம்' என எழுதினார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மத்தியில ஆட்சி அமைத்துள்ளது. பிரதமராக மோடி பதவி ஏற்றார்.

கூட்டணி ஆட்சி என்பதால் தெலுங்கு தேசம் கட்சிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டது. அதன்படி கிஞ்சராபு ராம் மோகன் நாயுடுவுக்கு,  மத்திய விமானப் போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டது.


இந்நிலையில் அவர் இன்று  பதவி ஏற்று கொண்டார். பதவி ஏற்பதற்கு முன்னதாக, கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு, “ஓம் ஸ்ரீ ராம்” என ஒரு தாளில் 21 முறை எழுதிவிட்டு, பின்னர் பதவி ஏற்றார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.