1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. rajinikanth chiranjeevi ops participate in chandrababu naidu function

சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் ரஜினிக்கு பின்வரிசையில் ஓபிஎஸ்.. வைரல் புகைப்படம்..!

ரஜினிகாந்த்
ஆந்திர முதல்வராக இன்று சந்திரபாபு நாயுடு பதவி ஏற்று கொண்டிருந்த நிலையில் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.  மேலும் கூட்டணி கட்சி தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 
 
இந்த நிலையில் இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் நடிகர் பாலையா ஆகிய மூன்று தென்னிந்திய பிரபல நடிகர்கள் கலந்து கொண்டனர் என்பதும் இவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த விழாவில் முதல் வரிசையில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலையா உள்ளிட்டவர்களுக்கு இருக்கை அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு பின்னால் இரண்டாவது வரிசையில் தான் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அவர்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
அதே அமைச்சர்களுக்கு அதே துறை தான்.. எந்த வித மாற்றமும் இருக்காது: கார்த்தி சிதம்பரம் விமர்சனம்..!