1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 12 ஜூன் 2024 (08:35 IST)

சந்திரபாபு நாயுடு தலைமையில் 24 அமைச்சர்கள் பதவியேற்பு: கூட்டணி கட்சிக்கும் பதவி..!

சந்திரபாபு நாயுடு தலைமையில் பதவியேற்க உள்ள அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் உள்ளிட்ட 24 பேர் அமைச்சர்களாக பதிவி ஏற்க உள்ளனர் என தெரிய வந்துள்ளது.
 
ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் தெலுகு தேசம் கட்சி தனி பெரும்பான்மை பெற்று இருந்தாலும் கூட்டணி கட்சிக்கும் அமைச்சர் பதவி வழங்க சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து கூட்டணி கட்சியில் உள்ள பவன் கல்யாண் அவர்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
 
முன்னதாக அவருக்கு துணை முதல்வர் பதவி ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் அவர்களுக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் பதவி ஏற்க இருக்கும் 24 அமைச்சர்களின் பட்டியல் இதோ:

 
 
Edited by Siva