வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 ஏப்ரல் 2023 (09:27 IST)

இனி ஸ்விக்கியில் ஆர்டர் செய்யவே கட்டணம்! – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

swiggy
உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி இனி தனது வாடிக்கையாளர்கள் உணவு ஆர்டர் செய்ய ப்ளாட்ஃபார்ம் கட்டணம் நிர்ணயித்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி, ஸொமாட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் இதுவரை உணவுக்கான கட்டணம் மற்றும் டெலிவரி கட்டணத்தை மட்டும் நிர்ணயித்து வந்தன. இந்த உணவு டெலிவரி செயலிகள் மூலம் நகரப்பகுதிகளில் பெரும்பாலான உணவு ஆர்டர்களை வாடிக்கையாளர்கள் அளிக்கின்றனர்.

இந்நிலையில் பிரபலமான ஸ்விக்கி நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் இனி உணவு ஆர்டர் செய்ய ஒரு ஆர்டருக்கு ரூ.2 ப்ளாட்ஃபார்ம் கட்டணமாக நிர்ணயித்துள்ளது. முதற்கட்டமாக ஹைதராபாத், பெங்களூர் நகரங்களில் இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்து மற்ற நகரங்களுக்கும் இது விரிவாக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் மற்ற நிறுவனங்களும் இதுபோன்ற ப்ளாட்ஃபார்ம் கட்டணம் விதிக்கலாம் என்பதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Edit by Prasanth.K