சுஷ்மா ஸ்வராஜூக்கு கவர்னர் பதவி?எந்த மாநிலத்திற்கு தெரியுமா?
நரேந்திர மோடி தலைமையிலான கடந்த ஆட்சியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிடவில்லை. தனது உடல்நலம் கருதி மீண்டும் தேர்தலில் போட்டியிடவில்லை என்று சுஷ்மா ஸ்வராஜ் விளக்கமளித்தார்.
இந்த நிலையில் சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் ஆந்திர மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டிருப்பதாக சற்றுமுன் செய்திகள் சமூக வலைத்தளங்களில் கசிந்து வருகிறது. ஆந்திர ஆளுநரான நரசிம்மனுக்கு பதிலாக சுஷ்மா சுவராஜ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை.
இன்று ஆந்திர மாநில கவர்னராக இருந்த நரசிம்மன், டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர்களை சந்தித்தார் என்பது தெரிந்ததே. ஆந்திர மாநிலத்தில் ஆட்சி மாறியதை அடுத்தே நிர்வாக வசதிக்காக கவர்னரும் மாற்றப்பட்ட வாய்ப்பு இருப்பதாக கடந்த சில நாட்களாக கூறப்பட்டது.