வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 1 ஜூன் 2019 (16:54 IST)

’இரு பிரபல கட்சியினர் இடையே மோதல் : 2 பேர் படுகாயம்

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று மத்தி ஆட்சி அமைத்துள்ளது. ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற - மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் - ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி இடையே தொடக்கம் முதலே அதிக மோதல் போக்கு காணப்பட்டது. இதில் சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 175  தொகுதிகளில் 151  தொகுதிகளில் வென்று ஒய் எஸ் ஆர் காஙிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடித்தார். 
மக்களவைத் தேர்தலிலும் பெரும்பான்மையான இடங்களில் வெற்றுபெற்றுள்ளது ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி. கடந்த முறை முதலைமைச்சராக இருந்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டது. இதனையடுத்து ஜெகன் மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.
 
இந்நிலையில் இன்று ஆனந்தபூரில்  இவ்விரு கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில்  படுகாயமடைந்த 2 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் ஆந்திர அரசியலில் பரபரப்பு எற்பட்டுள்ளது.