1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 30 மே 2019 (13:21 IST)

ஒய் எஸ் ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி அனே நேனு... மக்கள் ஆரவாரத்தோடு பதவியேற்றார் ஜெகன்!

ஒய் எஸ் ஜெகன்மோகன் ரெட்டி அனே நேனு... என துவங்கி மக்கள ஆரவாரத்தோடு ஆந்திர முதல்வராக பதவியேற்றார் ஜெகன் மோகன் ரெட்டி. 
 
ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளில் வென்று மாபெரும் வெற்றி பெற்ற ஜெகன்மோகன் ரெட்டி அம்மாநில முதல்வராக பதவியேற்றார். 
 
விஜயவாடாவில் உள்ள இந்திராகாந்தி மைதானத்தில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது. ஆந்திர ஆளுநர் நரசிம்மன் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பதவி பிரமானம் செய்து வைத்தார். 
 
இந்த விழாவில் ஜெகன் மோகன் ரெட்டியின் தாயார் விஜயம்மா பங்கேற்றார். தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் 3 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். 
 
கட்சி துவங்கி 9 ஆண்டுகளில் ஜெகன் முதல்வராக பதவியேற்றுள்ளார். குறைந்த வயதில் முதல்வராக பதவியேற்பவர்களில் இவர் மூன்றாவது முதல்வராக உள்ளார்.