புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 2 ஜூன் 2019 (17:45 IST)

மாமியாரை பழிவாங்கிய மருமகன் : இப்படியுமா செய்வாங்க...

ஆந்திரபிரதேசம் மாநிலம விசாகப்பட்டிணத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர், குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் தனது மாமியார் மொபைல் எண்ணை ஆபாச தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து போலீஸார் அவரைக்கைது செய்துள்ளனர்.
இந்த நபருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.ஆனால் அடிக்கடி தன் மனைவி மற்றும் மாமியாருடன் சண்டை ஏற்படுவதாலும், தனக்கு மனைவி,மாமியார் மரியாதை அளிக்காததாலும் கோபம் அடைந்துள்ளரர். பின்னர் மாமியாரின் மொபைல் எண்ணை ஆபாச தளத்த்லி பதிவிட்டுள்ளார்.
 
தற்போது 59 வயதான மாமியாருக்கு அடிக்கடி அழைப்புகள் வந்துள்ளது. மேலும் ஆபாசமாகவும் பேசியுள்ளனர். இதனையடுத்து அவர் சைபர் கிரைம் போலீஸில் புகார் தெரிவித்தார். 
 
இதனையடுத்து புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீஸார் மருகன் தான் மாமியாரின் எண்ணை ஆபாச தளத்தில் பதிவிட்டதை கண்டுபிடித்தனர். பின்னர் அவரைக்கைது செய்த போலீஸார் அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.