வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : திங்கள், 28 ஜனவரி 2019 (11:48 IST)

விபசாரி என கூறிய கணவனை போட்டுத்தள்ளிய மனைவி- இதனை கொலையாக கருத முடியாது - உச்ச நீதிமன்றம்

விபசாரி என கூறிய கணவனை ஆத்திரத்தில் மனைவி கொலை செய்ததை கொலையாக கருத முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



 
மனைவி வேறு ஆணுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறிய  கணவன், தனது மனைவி மற்றும், மகளை விபசாரிகள் என திட்டியுள்ளார். அதில் ஆத்திரமடைந்த மனைவி கணவனை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் தண்டனையை குறைக்கக்கோரி மனைவி மேல்முறையீடு செய்த வழக்கில் தீர்ப்பளித்த  உச்ச நீதிமன்றம்  கணவனே, விபசாரி என கூறுவதை, குறிப்பாக மகளையும் அந்த வார்த்தை கொண்டு திட்டுவதை எந்த இந்திய பெண்ணும் விரும்பமாட்டார் என தெரிவித்தது. விபசாரி என கணவன் கூறிய அந்த வார்த்தை தான் மனைவிக்கு கொலை செய்ய தூண்டியதாகவும், இதனை கொலை என கருதமுடியாது எனவும் உச்ச நீதிமன்றம் கூறியது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணின் தண்டனையும் 10 ஆண்டுகளாக குறைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.