செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 6 அக்டோபர் 2024 (08:01 IST)

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பு: மறு ஆய்வு செய்ய கோரிய மனு தள்ளுபடி..!

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்க வேண்டிய நிலையில், அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கூடிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 தனிநபர்கள், நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் வகையில் உருவான தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியல் அமைப்புக்கு எதிரானது என கடந்த பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.
 
இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. 
 
இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மறு ஆய்வு மனுக்களை ஆய்வு செய்தபோது, தீர்ப்பு பதிவுகளில் பிழை இருந்ததற்கான முகாந்திரம் இல்லை என்றும், எனவே இந்த மனுக்கள் மறு ஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், நீதிபதிகள் தீர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
 
Edited by Siva