1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 மார்ச் 2023 (11:52 IST)

அதானி விவகாரம்; செபி அமைப்பு விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவு

adani
பங்குச் சந்தையில் அதானி விவகாரம் குறித்து விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. பங்குச்சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மிக மோசமாக சரிவடைந்து வருகிறது. அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை காரணமாக இந்த சரிவு ஏற்பட்டது என்பதும் இதனால் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் அதானி ஹிண்டன்பர்க் விவகாரத்தில் செபி அமைப்பு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்
 
மேலும் இதுகுறித்து நீதிபதிகள் கூறிய போது பொதுமக்களின் பணம் கடுமையான அச்சுறுத்தலில் இருக்கிறது என்றும் முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நெறிமுறை குழுவை செபி அமைக்க வேண்டும் என்று  இந்த நீதிமன்றம் உணர்கிறது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran