மருத்துவப் படிப்பில் 27% ஓ.பி.சி. இடஒதுக்கீடு செல்லும்! - உச்ச நீதிமன்றம்
மருத்துவ படிப்பில் 27 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்றும் மருத்துவ படிப்பு கவுன்சிலிங் நடத்த அனுமதி என்றும் சற்றுமுன் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு மட்டும் செல்லும் என்று உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம் உயர்சாதியினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக மார்ச் 3 வது வாரம் விரிவான தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது
மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற இந்த அறிவிப்பு காரணமாக எம் டிஎம்எஸ் உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் சேர்க்கையில் ஓபிசி மாணவர்கள் 27% இடம் கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது.

