1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 7 ஜனவரி 2022 (11:11 IST)

சரும பிரச்சனைகளுக்கு அற்புத நிவாரணம் தரும் மருதாணி இலை !!

மருதாணியை கைகளில் பூசுவதால் நகங்களில் உள்ள கிருமிகள் அழிக்கப்படுகின்றன. எனவே நகச்சுத்தி போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது உடல் சூட்டை குறைத்து விடுகிறது.

சிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல்கள் காணப்படும் மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பை சேர்த்து அரைத்து பூசி வந்தால் வெகு விரைவில் அந்த கருந்தேமல்கள் மறையும்.
 
அரிப்பு, படை போன்ற சரும பிரச்சனை நோய்களுக்கு இந்த இலையை அரிசிச் சோற்றுடன் இரவு ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் நீராகாரமாகச் 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தோல் வியாதிகள் வராமல் தடுக்கும்.
 
மருதாணி இலைகளை அரைத்து அம்மை புண்கள் மேல் பூசி வரலாம். இப்படி பூசி வந்தால் அம்மை புண்கள் 3 முதல் 5 நாட்களில் குணமாகும். வெயில்  கட்டிகளுக்கும் அரைத்துப் பற்று  போடலாம், விரைவில் குணமாகும்.
 
தலைமுடி பிரச்சனைகளுக்கும் மருதாணி இலைகளை அரைத்து பயன்படுத்தலாம். வாரம் ஒரு முறை இந்த பேஸ்ட்டை தலையில் தடவி வந்தால் பொடுகு பிரச்சனை தீரும், மேலும் தலைமுடி மென்மையாகி பளபளக்கும். மருதாணி இலைகள் அரைத்து நெற்றியில் தடவினால் தீராத தலைவலியும் தீரும்.
 
மருதாணி இலையுடன் சிறிது பாக்கு சேர்த்து அம்மியில் அரைத்து இரவில் கை, மற்றும் கால் நகங்களின் மீது வைத்து வந்தால் நகம் சொத்தையாவது தடுக்கப்படும்.