1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 6 ஜனவரி 2022 (19:15 IST)

முசுமுசுக்கை இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெய்யைத் தலைக்குத்தேய்த்து குளித்து வந்தால் இளநரை மாறும்.

முசுமுசுக்கை பொடியை தண்ணீர் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இருமல் குணமாகும். முசுமுசுக்கையை சூரணமாக செய்து உட்கொள்ள நாள்பட்ட எலுப்புருக்கி, ஆஸ்துமா, காசநோய், இளைப்பு நோய், ரத்தசுவாசநோய் போன்றவை குணமடையும்.
 
முசுமுசுக்கைக் கீரையை இடித்து சாறு எடுத்து நல்லெண்ணெய்யுடன் சேர்த்துக் காய்ச்சி தலைக்கு எண்ணெய்யாகவும், தலை குளிக்கவும் பயன்படுத்துகிறார்கள்.
 
முசுமுசுக்கீரை காசநோயால் அவதிபடுபவருக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காசநோய் குணமாகும். இந்தக் கீரை மட்டுமன்றி இதன் கிழங்கைக் கூட மருத்துவத்திற்குப் பயன்படுத்துகின்றனர். இதுவும் காச மற்று சுவாச சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்க கூடியது.
 
கண் எரிச்சல், உடல் எரிச்சல் குணமாக இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் இரு முறை தலை குளிக்க வேண்டும். மேலும் இடைவிடாத வாந்தி குணமாக முசுமுசுக்கை வேரை உலர்த்தி தூள் செய்து அரை தேக்கரண்டி அளவு ஒரு டம்ளர் நீரில் இட்டு அது அரை டம்ளராக வரும் வரை சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.
 
3 பிடி முசுமுசுக்கை இலைகளை நெய் அல்லது நல்லெண்ணெயில் வதக்கி துவையலாக்கி, தாளித்து சாப்பிட்டு வந்தால் இரைப்பிருமல், மூக்குப் புண் போன்றவை குணமாகும், இரத்தமும் சுத்தமாகும்.