திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 7 ஜனவரி 2022 (09:29 IST)

வாயு தொல்லையிலிருந்து நிரந்த தீர்வு பெற உதவும் குறிப்புகள் !!

மலசிக்கல் பிரச்சனை இருந்தால் வாயு பிரச்சனைக்கு வழி வகுக்கும். குடலில் புழுக்கள் இருந்தாலும் வாயு தொல்லைக்கு காரணமாக அமையும்.

இஞ்சி சாற்றை காலையில் தேனீருடன் கலந்து குடிக்கலாம். அல்லது இஞ்சி சாற்றை எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீருடன் கலந்து குடிக்கலாம்.
 
பூண்டில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. உணவில் அதிகம் பூண்டினை சேர்த்துக் கொள்ளுங்கள். வாயு பிரச்சனைக்கு சிறந்த தீர்வு பூண்டு.
 
மருந்து கடைகளில் கிடைக்கும் திரிபலா பொடியை கொதிநீரில் ஊற வைத்து ஆறிய பின்னர் இரவு உறங்க செல்ல முன் தினமும் குடித்து வந்தால் வாயு தொல்லையில் இருந்து நிரந்த தீர்வை பெறலாம்.
 
தயிர், பால் மற்றும் ஐஸ்கிரீம் உள்ளிட்ட அனைத்து வகையான பால் பொருட்களை அதிகம் உட்கொள்வதால் குடலில் மலத்தை கடப்பது என்பது கடினமாக இருக்கும்.
 
மலச்சிக்கல் சமயங்களில் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது அல்லது யோகா பயிற்சி போன்றவற்றை செய்யலாம். இவை இரண்டும் உங்கள் அடிவயிற்று தசைகளை மசாஜ் செய்ய உதவுகிறது. இதனால் உங்கள் குடலில் இருந்து மலம் எளிதில் வெளியேறுகிறது.