1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (08:59 IST)

இப்படி போன எப்படி சமைக்கிறது.. இரு மடங்கு உயர்ந்த எண்ணெய் விலை! – இல்லத்தரசிகள் கவலை!

Sunflower
உக்ரைன் போர் காரணமாக தொடர்ந்து சூரிய காந்தி எண்ணெய் விலை உயர்ந்து இரு மடங்கை எட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில், உக்ரைனிலிருந்து சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதி குறைந்துள்ளது. இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் பயன்பாட்டில் உக்ரைன் ஏற்றுமதி முக்கியபங்கு வகிக்கும் நிலையில் போர் தொடங்கியது முதலாகவே சூரியகாந்தி எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.

போர் தொடங்கி 43 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. போருக்கு முன்னதாக லிட்டர் ரூ.100க்கு விற்கபட்ட சூரியகாந்தி எண்ணெய் தற்போது லிட்டர் ரூ.200க்கு விற்கப்பட்டு வருகிறது. மற்ற வகை எண்ணெய்களும் விலை உயர்வை சந்தித்துள்ளது இல்லத்தரசிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.