1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 2 ஏப்ரல் 2022 (11:02 IST)

மார்ச் மாதத்தில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெயில்!

இந்தியாவில் 1901 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் அளவு கடந்த மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது என தகவல்.

 
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் பலர் சாலையோர இளநீர் கடைகள், பழச்சாறு கடைகளை நாடும் நிலை உள்ளது.
 
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது. ஈரோடு, கரூர், மதுரை, திருச்சி, தொண்டி மற்றும் வேலூரில் 100 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாக வெப்பநிலை பதிவானது. 
 
இந்நிலையில் இந்தியாவில் 1901 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் அளவு கடந்த மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
 
கடந்த 2022 மார்ச் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை 33.1 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20.24 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளது.இதற்கு முன்பு இந்தியாவில் 1901-ம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் அளவு கடந்த 2010 ஆம் ஆண்டில் 33 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.