திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 22 மார்ச் 2024 (16:40 IST)

ஆம் ஆத்மி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்..! அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு கண்டனம்..!!

AAP Protest
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து புதுச்சேரியில் செல்போன் டவர் மீது ஏறியும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
 
ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டில்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த விவகாரம் எதிர்கட்சிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் டில்லி முதல்வரை கைதை கண்டித்து புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் புதுச்சேரி பிருந்தாவனம் பகுதியில உள்ள கட்டிடத்தின் மாடியில் உள்ள செல்போன் டவர் மீது இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் திடீரென சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.