புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: ஞாயிறு, 29 ஜூன் 2025 (13:48 IST)

தற்கொலை தாக்குதல் நடத்தியது இந்தியாவா? பழி போடத் துடித்த பாகிஸ்தான்! - அம்பலமான உண்மை!

Wazristan suicide attack

பாகிஸ்தானின் வஸ்ரிஸ்தான் பகுதியில் நடந்த தற்கொலை தாக்குதலில் இந்தியா மீது பாகிஸ்தான் பழி போட முயன்ற நிலையில் புதிய உண்மை அம்பலமாகியுள்ளது. 

 

பாகிஸ்தானின் வஸ்ரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் பலியானார்கள். மேலும் குழந்தைகள், பெண்கள் உட்பட பொதுமக்களும், ராணுவ வீரர்களும் மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது.

 

பாகிஸ்தானில் நடந்த இந்த தாக்குதல் இந்தியாவால் நடத்தப்பட்டிருக்கலாம் என நைஸாக இந்தியா மீது பழிப்போட பாகிஸ்தான் முயன்றது. ஆனால் இந்த சம்பவம் குறித்து விளக்க அறிக்கை வெளியிட்டிருந்த இந்திய பாதுகாப்பு அமைச்சகம், எந்த வித ஆதாரமும் இல்லாத அந்த குற்றச்சாட்டிற்கு கண்டனமும், மறுப்பும் தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உசுத் அல் ஹர்ப் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஹபீஸ் குல் பகதூர் அமைப்பின் துணை அமைப்பான இது தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் எனப்படும் TTP பயங்கரவாத அமைப்பின் ஒரு பிரிவாகும்.

 

ஏற்கனவே பாகிஸ்தானிற்குள் பலுச் விடுதலை படையினர், டிடிபி உள்பட பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பல அமைப்புகள் உள்ள நிலையில் எந்த வித சான்றும் இல்லாமல் இந்தியா மீது பழி போட துடித்த பாகிஸ்தானின் வேடம் இதில் அம்பலமாகியுள்ளது.

 

Edit by Prasanth.K