நான் சொன்னதை கேட்காததால் கைது: அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து அன்னா ஹசாரே ..!
நான் சொன்னதை அரவிந்த் கெஜ்ரிவால் கேட்கவில்லை என்றும் அதனால் தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.
மதுபான கொள்கை வழக்கில் நேற்று இரவு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது கைது குறித்து அன்னா ஹசாரே தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் எனது பேச்சைக் கேட்காமல் போனது வருத்தமாக உள்ளது என்றும் அவர் முதல்வரானதும் இரண்டு முறை அவருக்கு கடிதம் எழுதினேன் என்றும் என் பேச்சைக் கேட்காததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்
நான் அவருக்காக வருத்தப்படவில்லை என்றும் அவர் என்னுடன் இருக்கும் போது நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும் என்று கூறினார், ஆனால் அதை அவர் பதவி வந்தவுடன் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை, நான் இப்போது அவருக்கு ஆலோசனை சொல்லப் போவதுமில்லை, அரசும் சட்டமும் என்ன செய்கிறதோ அதை செய்யட்டும் என்று கூறினார்
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே போராட்டம் நடத்திய போது அவருடன் இணைந்து போராட்டம் நடத்தியவர் தான் அரவிந்த் கெஜ்ரிவால் என்பதும் அதன் பிறகு அவர் அரசியல் கட்சி தொடங்கிய முதல்வராகிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Siva