புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 28 மார்ச் 2019 (08:31 IST)

எனக்கு பாஜகவின் கொள்கைகள் பிடிக்காது – சுப்ரமணிய சுவாமி சர்ச்சைப் பேச்சு !

பாஜகவின் முன்னனி தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி தனக்கு பாஜகவின் கொள்கைகள் பிடிக்காது எனக் கூறியுள்ளார்.

பாஜகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சுவாமி சர்ச்சையானக் கருத்துகளுக்கு சொந்தக்காரர்.  கட்சித் தலைமைக்கெல்லாம் அஞ்சாமல் தன் மனதுக்குப் பட்டதை பளிச்சென்று கூறுபவர், அது பத்திரிக்கையாளர் சந்திப்பானாலும் சரி.. நேர்காணல்களானாலும் சரி…சமீபத்தில் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் ராஜீவ் கொலைவழக்கில் சிக்கியுள்ள 7 பேரின் விடுதலை சாத்தியமில்லை எனக் கூறி அதிர்ச்சியளித்தார்.

அதையடுத்து தான் இருக்கும் கட்சியான பாஜகவின் கொள்கைகள் தனக்குப் பிடிக்காது எனக் கூறி அடுத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். நேற்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். பாஜகவின் தேர்தல் பிரச்சாரப் பேச்சாளர்கள் பட்டியலில் நீங்கள் இடம்பெறாதது ஏன் எனச் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.அதற்குப் பதிலளிக்கையில் ‘ அப்பட்டியலில் எனது பெயர் இருக்காது. அவர்களின் கொள்கைகள் எனக்குப் பிடிக்காது. பாஜக கூட்டணி அமைக்கக் கூடாது. தனியாகத்தான் போட்டியிடவேண்டும் என நான் கூறினேன். 25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பாஜகவுக்கு ஐந்து தொகுதிகள் கிடைத்தன. இப்போதும் ஐந்து தொகுதிகள் மட்டும்தான் கிடைக்கின்றன. அதிலும் எத்தனை வெற்றிகள் கிடைக்கும் எனத் தெரியவில்லை’ எனக் கூறினார்.