புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 8 பிப்ரவரி 2020 (09:08 IST)

நான் சோனியா காந்தியை சிறைக்கு அனுப்பும் வேலையில் இருக்கிறேன் : சுப்ரமண்ய சுவாமி !

சுப்ரமண்ய சுவாமி

சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் சுப்ரமண்ய சுவாமி பல கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி சர்ச்சையான பேச்சுக்களுக்காக மிகவும் புகழ்பெற்றவர். நாட்டின் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருக்குப்  பொருளாதாரம் புரியாது என விமர்சனம் செய்யக் கூடிய அளவுக்கு தைரியமானவர.  இந்நிலையில் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் சில சர்ச்சையானக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டைப் படித்து விட்டீர்களா? அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன கேட்டதற்கு ‘நான் இப்போது சோனியா காந்தி மற்றும் சிதம்பரம் உள்ளிட்டவர்களை சிறைக்கு அனுப்பும் வேலையில் இருக்கிறேன். அதனால் பட்ஜெட்டை படிக்கவில்லை. படித்ததும் அதை பற்றி கூறுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.