புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (18:46 IST)

போராட்டம் செய்த 10 பாஜகவினர்: நூற்றுக்கணக்கில் குவிந்த விஜய் ரசிகர்கள்: என்.எல்.சியில் பரபரப்பு

என்.எல்.சியில் குவிந்த விஜய் ரசிகர்கள்
விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்.எல்.சி. சுரங்கம் அருகே திடீரென இன்று மாலை பாஜகவினர் சுமார் 10 பேர் குவிந்து பாஜகவின் கொடிஐ கையில் வைத்து போராட்டம் நடத்தியதாகவும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பிற்கு என்எல்சி அனுமதி தரக்கூடாது என்று அவர்கள் கோஷமிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது
 
இதனால் படப்பிடிப்புக்கு மீண்டும் பிரச்சனை ஏற்படுமா? என்ற அச்சம் படக்குழுவினர்களிடம் இருந்தது. இந்த நிலையில் மாஸ்டர் படப்பிடிப்புக்கு எதிராக போராட்டம் பாஜகவினர் போராட்டம் நடத்துவது குறித்த செய்தி பரவியதும் விஜய் ரசிகர்கள் உடனடியாக அந்த பகுதியில் குவிந்தனர். பாஜகவினர் வெறும் 10 பேர் மட்டுமே இருந்த நிலையில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
விஜய் ரசிகர்களை பார்த்ததும் பாஜகவினர் கலைந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் நாளை மீண்டும் பாஜகவினர் போராட்டம் செய்யவிருப்பதாகவும், என்.எல்.சி மேலதிகாரிகளை சந்தித்து படப்பிடிப்புக்கு அனுமதி தரக்கூடாது என்று கோரிக்கை வைக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது