1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. BJP protest against Master shooting in Neyveli

மாஸ்டர் படப்பிடிப்பிற்கு பாஜகவினர் எதிர்ப்பு

பாஜக
மாஸ்டர்

நெய்வேலி என்.எல்.சி. சுரங்கத்தில் படப்பிடிப்பிற்கான அனுமதி தந்தது தவறு என பாஜகவினர் சுரங்கத்தின் முன் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விஜய் நடிக்கும் “மாஸ்டர்” திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நெய்வேலியின் என்.எல்.சி. சுரங்கத்தில் நடந்து வந்த நிலையில், விஜய்யை திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என சென்னைக்கு அழைத்து சென்றனர்.

இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் விஜய் வீட்டிலிருந்து கணக்கில் காட்டப்படாத ஆவணங்களோ ரூபாயோ எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், இன்று விஜய் மீண்டும் நெய்வேலி சுரங்கத்தில் நடைபெறும் படபிடிப்பில் கலந்துக் கொண்டார்.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் படபிடிப்பிற்கு நெய்வேலியில் என்.எல்.சி. சுரங்கத்தில் அனுமதி அளிக்கப்பட்டது தவறு என சுரங்கத்தின் முன் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுரங்கம் அமைந்துள்ள இடத்தில் படபிடிப்பு நடத்த எப்படி அனுமதி அளிக்கலாம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் என்.எல்.சி. சுரங்கம் உள்ள பகுதியில் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே செல்ல வேண்டும் என பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
About Writer
Arun Prasath
அடுத்த கட்டுரையில்
ரஜினிக்கு எதிராக விஜய்யை களமிறக்கும் அரசியல்வாதிகள்