செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2020 (16:14 IST)

”போராட்டம் நடத்தலாம், ஆனால் ”அப்படி” நடத்தக்கூடாது..” சுப்ரமணிய சுவாமி விளக்கம்

ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்தலாம் ஆனால், அச்சம் ஏற்படுத்தி போராட்டம் நடத்தக்கூடாது என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

சிஏஏக்கு எதிராக நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல வன்முறைகளும் உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன. குறிப்பாக சமீபத்தில் டெல்லியில் வெடித்த கலவரம் நாட்டையே உலுக்கியது.

இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள பிஜேபியை சேர்ந்த சுப்ரமணியன் சுவாமி, “ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்தலாம், ஆனால் அச்சம் ஏற்படுத்தி போராட்டம் நடத்தக்கூடாது” என கூறியுள்ளார்.

மேலும், “சிஏஎவினால் எந்த பிரச்சனையும் இல்லை, யாருடைய குடியுரிமையையும் பறிக்கப்போவதில்லை” எனவும் கூறியுள்ளார்.