செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2020 (12:25 IST)

”முதல்வருக்கு தமிழ் புரியவில்லை..இங்கிலிஷ்லேயே பதில் சொல்வோம்”…துரை முருகன்

திமுக பொருளாளர் துரை முருகன் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து முதல்வருக்கு தமிழில் சொல்லியும் புரியவில்லை, இனி ஆங்கிலத்தில் பதில் அளிப்போம்” என கூறியுள்ளார்.

திமுக பொருளாளர் துரை முருகன் மற்றும் எம்.எல்.ஏ. நந்தகுமார் வேலூர் மாவட்டம் கலெக்டர் சண்முக சுந்தரத்தை சந்தித்து, குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளை மக்களுக்கு செய்து தர வேண்டும் என மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துரை முருகனிடம், குடியுரிமை திருத்த சட்டத்தால் தமிழகத்தில் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் ஆதாரத்துடன் நிரூபியுங்கள் என முதல்வர் பழனிசாமி சட்டமன்றத்தில் திமுகவிடம் கேள்வி எழுப்பினாரே? என கேட்டனர்.

அதற்கு பதிலளித்த துரை முருகன், “சிஏஏ குறித்து முதல்வருக்கு தமிழில் பதிலளித்தோம். ஆனால் அவருக்கு புரியவில்லை. இனி முதல்வரின் கேள்விக்கு ஆங்கிலத்தில் பதில் அளிப்போம்” என கூறியுள்ளார்.