செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2020 (12:40 IST)

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்வு..

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 30 ஆக இருந்த நிலையில் தற்போது டெல்லியில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 31 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும்வரை மக்கள் பொது இடங்களில் கூட வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.