டிக் டாக்கில் ஈடுபடக் கூடாது : மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்
பல துறைகளில் இந்தியாவிற்கே தமிழ்நாடு முன்னோடி மாநிலம் என்றும், விஞ்ஞானம் என்றதில் டிக் டாக் என்றவையற்றில் ஈடுபடக்கூடாது என்றும் மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள் – புத்தகங்கள் தான் வாழ்வில் மக்களை மேன்மடைய செய்யும் என்றும், கரூர் புத்தகத்திருவிழாவில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ருசிகரமாக பேசினார்.
கரூரில் 3 வது புத்தகத்திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கி மூன்றாவது நாளாக இன்றும் நடைபெறும் நிலையில், அந்த புத்தகத்திருவிழாவில், போதையில் பயணம், பாதையில் மரணம் என்கின்ற தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கட்டூரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, அனைவருக்கும் பரிசுகள் வழங்கி கொளரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்., உள்ளங்கையில் உலகம் என்ற வகையில் விஞ்ஞானம் உயர்ந்துள்ளது. அந்த விஞ்ஞானத்தினை வைத்து ஒரு மாணவரை உயர்த்தி கொள்ளவும், தாழ்த்திக்கொள்ளவும் முடியும் என்றார். மேலும், டிக் டாக் என்கின்ற செயலி, அது சமூகத்தினை சீரழிக்கும் செயல் என்றார். ஆகவே தான் தமிழக அரசு தொடர்ந்து அதை எதிர்த்து, அதை தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் மாணவ, மாணவிகள் யார், என்ன ஆக வேண்டுமென்றும், அவர்களுடைய எண்ணத்தினை ஒருநிலைப்படுத்தி நன்கு படிக்க வேண்டுமென்றார்.
ஆகவே கல்வித்துறைக்கு மட்டும் இந்திய அளவில் தமிழகத்தில் தான் சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய்களை பள்ளிக்கல்வித்துறைக்காக வாரி வழங்கி இருக்கின்றார். அதே போல தான் 29 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் கொடுத்துள்ளோம் ஆகவே படிப்பதற்காகவும், நல்ல கல்வி படிக்கும் வகையில் இந்திய அளவில் தமிழகம் தான் முன்னோடி மாநிலமாக விளங்குகின்றது என்றார்.
ஆகவே படித்து முடித்தும் புத்தகங்களை நாம் கற்றுக் கொண்டால் மேன்மேலும் நம்மை நாமே வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றார். தற்போதைய சூழலில் புத்தகத்தினை படிப்பதற்கு பதில் ஒரு கையில் செல் போனை மட்டுமே கொண்டு அதில் மாணவர்கள் ஆழ்ந்துள்ளார்கள். ஆகவே, தேவையில்லாமல் செல் போனை நோண்டுவதற்கு பதில் மனித வாழ்வில் பொக்கிஷமாக விளங்கும் புத்தகங்களை படிக்க வேண்டுமென்றார். மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர்கள் எல்லாம் புத்தகங்கள் படித்து தான் அனைத்து மொழிகளிலும் பேசினார்.
மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு 8 மொழிகள் தெரியும், அவர் சட்டசபையில் எந்த நேரத்தில் எந்த வகையான கேள்விகள் கேட்டாலும் அதற்கு திறம்பட பதில் கூறும் வல்லமை பெற்றவர் ஜெயலலிதா, அவருடைய அந்த திறமைக்கு மூலக்காரணம் புத்தகங்களே, ஆகவே புத்தகங்கள் நம்முடைய வாழ்வில் ஒரு பொக்கிஷம் என்று எண்ணி பார்த்து அதை பயனுள்ளதாக பார்க்க வேண்டுமென்றார்.