வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 19 ஜூன் 2024 (15:15 IST)

நீட் தேர்வு முறைகேடுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! போராட்டத்தை அறிவித்த திமுக..!!

Anna Arivalayam
நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில்  ஜூன் 24 ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த மே ஐந்தாம் தேதி நடைபெற்ற நீட் நுழைவு தேர்வில், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற வரும் நிலையில், நீட் முறைகேடுகளை கண்டித்து ஜூன் 21 ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் ஜூன் 24 ஆம் தேதி காலை 9 மணி அளவில், சென்னை வள்ளூவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் அறிவித்துள்ளார். 

 
நீட் தேர்வே தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதற்காக நிறைவேற்றி அனுப்பியிருக்கும் சட்ட மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டுமென்றும், நீட் தேர்வில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய மோசடிகளை, குளறுபடிகளை களைவதற்கு மேல்நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நீட் எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும், நீட் தேர்வை நடத்தியே தீருவேன் என்ற எதேச்சதிகாரப் போக்கினை கடைபிடிக்கும் பா.ஜ.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.