செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 19 ஜூன் 2024 (14:53 IST)

மகளுடன் பாஜகவில் இணைந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ..!

BJP Joined
ஹரியானா முன்னாள் முதல்வர் பன்சிலாலின் மருமகளும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான கிரண் சவுத்ரி, தனது மகளுடன் பாஜகவில் இன்று இணைந்தார்.
 
கிரண் சவுத்ரி பிவானி மாவட்டத்தில் உள்ள தோஷம் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். அவரது மகள் ஸ்ருதி சவுத்ரி ஹரியாணா காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக இருந்தவர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கிரண் சவுத்ரி தனது ராஜினாமா கடிதத்தில் கூறியுள்ளார்.
 
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அவர், தனது மகள் மற்றும் ஆதரவாளர்களுடன் பாஜகவில் என்று இணைந்தார். அப்போது அவருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.


டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  ஹரியாணா முதல்வர் நைப் சிங் சைனி, முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான மனோகர் லால் கட்டார் , கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் உடனிருந்தனர்.