1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 22 மே 2024 (17:51 IST)

பாஜக ஆட்சியில் மிகப் பெரிய ஊழல்.! ஆட்சிக்கு வந்ததும் விசாரிப்போம்..! ராகுல் காந்தி..!!

Raghul Modi
பாஜக ஆட்சியில் நடந்த மிகப் பெரிய நிலக்கரி ஊழல் அம்பலமாகியுள்ளது என்றும் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தது ஊழல் குறித்து விசாரிக்கப்படும் எனவும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 
அதிமுக ஆட்சியின்போது நிலக்கரி இறக்குமதியில் 6000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக  பிரபல நாளிதழில் செய்தி வெளியானது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, பாஜக ஆட்சியில் மிகப் பெரிய நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
பல வருடங்களாக நடந்து வரும் இந்த மோசடி மூலம் மோடியின் அபிமானத்துக்குரிய நண்பர் அதானி தரம் குறைந்த நிலக்கரியை போலி பில்கள் மூலம் மூன்று மடங்கு விலைக்கு விற்று பல ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளையடித்துள்ளார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

 
அமலாக்கத் துறை, சிபிஐ மற்றும் வருமான வரித் துறை ஆகியவை இந்த ஊழலில் அமைதியாக இருக்க எத்தனை டெம்போக்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை பிரதமர் சொல்வாரா? என்றும் ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு, இந்த மெகா ஊழலை இந்தியா கூட்டணி விசாரித்து, பொதுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைக்கும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.