ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 10 செப்டம்பர் 2018 (19:13 IST)

ஒரு Hai ல் தொடங்கி கல்யாணத்தில் முடியும் சஞ்சு சாம்சனின் காதல்

தன் நீண்ட் நாள் காதல் குறித்து மனம் திறந்த இளம் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் குறிப்பிட்டுள்ளதாவது:



கடந்த 2013ல் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி காலையில் சாருவுக்கு hai என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் அன்று தொடங்கி ஐந்து வருடங்கள் ஓடி விட்டன.நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிடுவதற்கு இத்தனை வருட காலம் ஆகி விட்டது என்றும், சாருவும் நானும் இணைந்திருந்தாலும் பொது இடங்களில் நடமாட முடியாத நிலையில் இருந்தோம். இனி இன்று முதலாக கைகோர்த்துக் கொண்டு நடக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

எங்கள் காதலை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட இரு வீட்டாருக்கும் மிக்க நன்றிகள் எனவும் ”சாரு உன்னைப் போன்ற மணப்பதற்கு நான் மகிழ்சியாக உணர்கிண்றேன். அனைவரும் எங்களுக்கு வாழ்த்து  கூறி ஆசீர்வதியுங்கள் என்று இளம் கிரிக்கெட் வீரரான சாம்சன் தெரிவித்திருக்கிறார்.