வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 10 செப்டம்பர் 2018 (15:22 IST)

பிரியங்கா சோப்ராவுடன் காதல் மலர்ந்தது எப்படி? – நிக்ஜோனாஸ் பதில்...

உலக அழகியான பிரியங்கா சோப்ரா,  நம்மூர் நயன்தாரா மாதிரி பாலிவுட்டில் கொடிகட்டி பறந்தார். அவருக்கு உள்ளூரை தாண்டி அயல் நாடுகளில் சென்று நடித்து புகழ் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்கு ஏற்றார் போல் வாய்ப்புகளும் வந்தன. ஹாலிவுட் படங்களில் நடித்த பிரியங்கா சோப்ரா, உலகம் முழுவதும் பிரபலம் ஆனார்.

 
இதற்கிடையே பலருடன் கிசுகிசுக்கப்பட்ட பிரியங்கா சோப்ரா, அவரை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸை சேர்த்து வைத்து பேசினார்கள்.இந்த காதலை இருவரும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டர். அமெரிக்காவில் நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்தியாவில் விருந்தும் நடந்தது. பின்னர் இருவரும் அமெரிக்கா பறந்துவிட்டனர்.  
 
இந்த நிலையில் பிரியங்கா சோப்ராவுடன் காதல் மலர்ந்தது எப்படி? என்று நிக் ஜோனாஸ் கூறுகையில்,
 
"ஒரு நண்பர் மூலமாக பிரியங்கா சோப்ரா எனக்கு அறிமுகமானார். இருவரும் போன் நம்பரை வாங்கிக்கொண்டோம். அதன்பிறகு நேரில் சந்திக்கவில்லை. போனில் மட்டும் தகவல்கள் பரிமாறிக்கொண்டு இருந்தோம். 6 மாதத்துக்கு பிறகு ஒரு விழாவுக்கு இருவரும் சென்று இருந்தோம். அங்கு மகிழ்ச்சியாக நேரத்தை கழித்தோம். 
 
அதன்பிறகு ஒன்றாக வெளியே சுற்றினோம். அப்போது எங்களை இணைத்து பேசினார்கள். எங்கள் தொடர்பு பற்றி கேள்விகளும் எழுப்பினார்கள். நாங்கள் காதலிப்பதும் வெளியாகி விட்டது. இந்தியாவில் பிரியங்கா சோப்ரா வீட்டில் நடந்த சடங்கில் நான் ஆன்மிக அனுபவத்தை உணர்ந்தேன்.’’
 
இவ்வாறு நிக் ஜோனாஸ் கூறினார்.