வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 19 ஜனவரி 2023 (16:08 IST)

எஸ்.எஸ்.சி தேர்வை தமிழில் எழுத முடியுமா? மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கம்

SSC
எஸ்.எஸ்.சி தேர்வை  தமிழில் எழுத அனுமதிக்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் இப்போது தமிழில் எழுத அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
 
ஆண்டுதோறும் மத்திய அரசின் பணிகளுக்கு போட்டி தேர்வுகளை நடத்தி ஆட்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நியமனம் செய்து வருகிறது.
 
இந்த நிலையில் இந்த தேர்வு இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த நிலையில் தமிழ் உள்பட 13 மாநில மொழிகளில் இந்த தேர்வு நடத்த கோரிக்கை விடப்பட்டது. 
 
இந்த நிலையில் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளப்பட்டு தமிழ் உள்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 11,409 காலியிடங்கள் இருப்பதாகவும் இந்த தேர்வு எழுதுவதற்கு https://ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran