வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 19 ஜனவரி 2023 (13:55 IST)

ஈரோடு கிழக்கு எங்களுடைய தொகுதி.. கே.எஸ்.அழகிரி பேட்டி!

alagiri
ஈரோடு கிழக்கு தொகுதி எங்கள் தொகுதி என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 
 
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்ததில் இருந்து அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி உள்ளன. 
 
திமுக கூட்டணியை பொறுத்தவரை அந்த தொகுதி காங்கிரஸ் கட்சியின் தொகுதி என்பதால் காங்கிரஸ் கட்சிக்கு வழங்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் அந்த தொகுதியை வெல்ல வேண்டும் என்பதற்காக பெரும் முயற்சி செய்யும் என்பதால் அதற்கு ஈடு கொடுக்க திமுக வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற குரலும் எழுப்பப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி எங்கள் தொகுதி என்றும் நாங்கள் வெற்றி பெற்ற தொகுதி என்றும் எங்கள் கட்சியின் வேட்பாளர் தான் அங்கு போட்டியிடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran