1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 ஜனவரி 2023 (15:53 IST)

மகளிர் ஆணைய தலைவியை காரில் இழுத்து சென்ற டிரைவர்! – டெல்லியில் அதிர்ச்சி!

Taxi
டெல்லியில் பெண்கள் ஆணைய தலைவியிடம் கார் டிரைவர் ஒருவர் தவறாக நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவராக உள்ளவர் ஸ்வாதி மாலிவால். இவர் இன்று அதிகாலையில் எய்ம்ஸ் மருத்துவமனை பகுதியிலிருந்து வெளியேறியபோது ஒரு கார் டிரைவர் அவரிடம் தவறாக நடந்து கொண்டதோடு, அவரை காருக்குள் வைத்து சில மீட்டர் தூரங்கள் கொண்டு சென்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்வாதி மலிவால் “நேற்று இரவு டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்தேன். ஒரு கார் ஓட்டுநர் குடிபோதையில் என்னைத் துன்புறுத்தினார், நான் அவரைப் பிடித்தபோது, ​​அவர் காரின் கண்ணாடியில் என் கையைப் பூட்டி என்னை இழுத்துச் சென்றார். கடவுள் உயிரைக் காப்பாற்றினார். டெல்லியில் மகளிர் ஆணையத் தலைவி பாதுகாப்பாக இல்லை என்றால், நிலைமையை கற்பனை செய்து பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகார் குறித்து உடனடி நடவடிக்கை மேற்கொண்ட டெல்லி போலீஸார் ஹரிஷ் சந்திரா என்ற கார் டிரைவரை கைது செய்துள்ளதாக கூறியுள்ளனர்.

Edit By Prasanth.K