வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (14:39 IST)

தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் SSC தேர்வுகள்: மத்திய அரசு அறிவிப்பு..!

தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் SSC தேர்வுகள் எழுதலாம் மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ளதை அடுத்து இந்த அறிவிப்புக்கு வரவேற்பு குவிந்து வருகிறது.
 
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் Multi Tasking Staff (MTS) தேர்வு, CHSLE தேர்வு ஆகியவை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
சி.ஆர்.பி.எப் காவலர்கள் தேர்வு இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது  தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் SSC தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran