செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 10 ஜூன் 2019 (08:03 IST)

பிரதமர் மோடிக்கு இலங்கை கொடுத்த பரிசு: என்ன தெரியுமா?

இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி தனது அதிகாரபூர்வமான வெளிநாட்டு பயணங்களை தற்போது தொடங்கியுள்ளார்.

நேற்று முன்தினம் கேரளா சென்று குருவாயூர் கோவிலில் வழிபட்ட மோடி, அங்கிருந்து மாலத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார். பிறகு அங்கிருந்து கிளம்பி நேற்று இலங்கை சென்றார்.

இலங்கை அதிபர் சிறிசேனாவை சந்தித்த அவர் தேவாலயத்தில் கொல்லப்பட்டவர்களுக்காக அஞ்சலி செலுத்தினார். பிறகு இலங்கை அதிபர் மாளிகையில் பிரதமர் மோடிக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

வெள்ளை தேக்கு மரத்தினால் செய்யப்பட்ட அழகிய புத்தர் சிலைதான் அந்த பரிசு. பிறகு இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவை சந்தித்த்து இரு நாட்டு உறவுகள் குறித்து விவாதித்த பிரதமர், முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷேவையும் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.