ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 8 ஜூன் 2019 (18:52 IST)

இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை- காதலன் மாயம்

மங்களூரில் 22 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் தனது அறையில் பிணமாக கிடந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிக்கமங்களூர் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவரது மகள் அஞ்சனா. இவர் வங்கி தேர்வுக்காக மங்களூரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் படித்து வந்திருக்கிறார். இதற்காக மங்களூரில் லூயிஸ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்திருக்கிறார்.  அஞ்சனாவோடு வேறு ஒரு இளைஞரும் தங்கியிருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று அஞ்சனாவின் வீட்டை சுத்தம் செய்ய வந்த பணியாள் அஞ்சனா கதவை திறக்காததால் வீட்டு உரிமையாளர் லூயிஸிடம் சொல்லியிருக்கிறார். லூயிஸ் பலமுறை அழைத்தும் அஞ்சனா கதவை திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே போயிருக்கின்றனர். அங்கே கட்டிலின் அருகே அஞ்சனா கேபிள் ஒயரால் கழுத்து நெரிக்கப்பட்டு பிணமாக கிடப்பதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் வீட்டின் உரிமையாளர் லூயிஸிடமும், பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் விசாரித்தபோது சஞ்சனாவோடு இருந்த நபர் பெயர் சந்தீப் எனவும், இருவரும் திருமணமான தம்பதியர் என்று சொல்லி வீட்டில் வாடகைக்கு வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. சஞ்சனா கொலை செய்யப்படும் முன்னர் அவரது வங்கி கணக்கில் இருந்து 15000 ரூபாய் எடுத்திருப்பதாகவும் போலீஸுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. தற்போது அந்த சந்தீப் யார் என்று போலீஸார் தேடி வருகின்றனர்.