திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 26 பிப்ரவரி 2018 (22:10 IST)

ஸ்ரீதேவியின் உடல் இன்று இந்தியா வரவில்லை! ஏன் தெரியுமா?

கடந்த சனியன்று துபாயில் திடீரென மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று மாலைக்குள் இந்தியா கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தடயவியல் சோதனை மற்றும் பிரேத பரிசோதனை முடிந்துவிட்டதால் துபாய் அரசின் வழக்கமான நடவடிக்கைகள் முடிவடைந்து ஸ்ரீதேவியின் உடல் எம்பார்மிங் செய்யப்பட்டு இன்று இந்தியாவுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் திடீரென ஸ்ரீதேவியின் உடல் நாளை தான் எம்பார்மிங் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரது உடல் நாளை தான் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது.

இந்த நிலையில் குளியல் தொட்டியில் மயங்கிய நிலையில் உயிரிழந்த ஸ்ரீதேவியின் மரணம் குறித்து போனிகபூர் உள்பட அவரது குடும்பத்தினர்களிடம் துபாய் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் துபாய் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.