1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Actres Sridevi sinked in water

ஸ்ரீதேவியின் மரணத்தில் திடீர் திருப்பம் ; நீரில் மூழ்கி உயிரிழந்தார் : புதிய தகவல்

Actres sridevi
நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் உள்ள நீரில் மூழ்கி மரணமடைந்தார் என தடவியல் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

 
துபாயில் நடைபெறும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவி நேற்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என செய்தி வெளியானது. மேலும், அவரது உடல் இன்று இரவு சிறப்பு விமானம் மூலம் இந்தியா வரவுள்ளது. 
 
தடவியல் துறையின் சான்றிதழ் கிடைக்காததால் உடலை இந்திய கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் மும்பைக்கு கொண்டு வரப்பட்டவுடன், அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்கு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
 
இந்நிலையில், ஸ்ரீதேவியின் உடல் தொடர்பான தடவியல் அறிக்கை அவரின் குடும்பத்தினரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில், அவர் நீரில் மூழ்கி அவர் மரணமடைந்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், அவரின் ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாகவும், அவர் மது போதையில் குளிக்க சென்ற போது மயக்கம் ஏற்பட்டு நீரில் மூழ்கியிருக்கலாம் எனவும் துபாய் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. 


அதேநேரம், அவரின் மரணத்தில் குற்றவியல் நோக்கம் எதுவுமில்லை எனவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
ஸ்ரீதேவியின் மரணத்தில் திருப்பம் ; நீரில் மூழ்கி உயிரிழந்தார் : புதிய தகவல்