செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2018 (17:11 IST)

ஸ்ரீதேவி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரபல காமெடி நடிகர்

மாரடைப்பால் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு காமெடி நடிகர் கவுண்டமணி  இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

துபாயில் நடைபெறும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவி நேற்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரின் உடல் அநேகமாக, மாலை இரவு மும்பை விமானம் நிலையம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஸ்ரீதேவியின் திடீர் மரணத்துக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும், தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் ஸ்ரீதேவி மறைவுக்கு காமெடி நடிகர் கவுண்டமணி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “ ஸ்ரீதேவியுடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். அதிலும் அரும்புகள் படத்தில் நான் வில்லனாகவும், அவர் ஹீரோயினாகவும் நடித்திருந்ததை மறக்க முடியாது. அவரின் மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,'' என தெரிவித்துள்ளார்.