1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2022 (09:31 IST)

மீண்டும் கோளாறான ஸ்பைஸ் ஜெட் விமானம்: விமான பயணிகள் அச்சம்!

Spicejet
கடந்த சில நாட்களாக ஸ்பைஸ் ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆங்காங்கே தரையிறக்கப்பட்டு வருகிறது என்பதும் ஒரு விமானம் பாகிஸ்தானில் கூட  தரையிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் மும்பை விமான நிலையத்தில் இருந்து குஜராத் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
 
கடந்த 40 நாட்களில் ஸ்பைஸ்ஜெட் விமானம் 9வது முறையாக ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கிளம்பிய இடத்திற்கே திரும்பி வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பயணிகளின் பாதுகாப்புக்காக தங்கள் விமானங்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ள நிலையில் நேற்று மீண்டும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கூறியபோது இனிவரும் காலங்களில் தொழில்நுட்ப கோளாறு இல்லாதவகையில் விமானங்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது