1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2022 (09:18 IST)

”என் பையில வெடிகுண்டு இருக்கு..?” - விமானத்தை கதிகலங்க செய்த பயணி!

Flight
பீகாரில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் ஒன்றில் பயணி ஒருவர் வெடிகுண்டு வைத்திருப்பதாக பீதியை கிளப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இண்டிகோ உள்நாட்டு விமானம் ஒன்று பீகாரின் பாட்னா விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட தயாரானது. அதில் பயணிகள் அனைவரும் ஏறிவிட்ட நிலையில் திடீரென பயணி ஒருவர் தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
அதிர்ச்சியடைந்த விமானிகள் உடனடியாக சக பயணிகளை பத்திரமாக வெளியேற்றியதுடன் விமான நிலைய பாதுகாப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் பயணியை பிடித்து பையை சோதனை செய்தபோது அதில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. தேவையற்ற வதந்தியை கிளப்பி பரபரப்பை ஏற்படுத்திய அந்த பயணியை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர். இதனால் விமானம் புறப்படும் நேரம் ஒத்திவைக்கப்பட்டது.