வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 ஜூலை 2022 (11:08 IST)

மீண்டும் விமானக் கோளாறு.. பாகிஸ்தானில் தரையிறக்கம்! – பயணிகள் அதிர்ச்சி!

Indigo Flight
அரபு அமீரகத்திலிருந்து இந்தியா புறப்பட்ட விமானம் ஒன்று கோளாறு காரணமாக அவசரமாக கராச்சியில் தறையிறக்கப்பட்டுள்ளது.

இண்டிகோ நிறுவன விமானம் ஒன்று அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு இந்தியாவின் ஐதராபாத் நோக்கி பயணித்தது. நடுவானில் விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானம் அவசர அவசரமாக பாகிஸ்தான் நாட்டின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விமான நிறுவன அதிகாரிகள் கூறும்போது ஷார்ஜா - ஐதராபாத் விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருந்தபோது விமானத்தில் கோளாறு இருப்பது விமானிக்கு தெரிந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக விமானம் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது என தெரிவித்துள்ளனர்.

அந்த விமானத்தில் இருந்த பயணிகளை ஐதராபாத் அழைத்து வருவதற்காக சிறப்பு விமானம் ஒன்று கராச்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த வாரமும் ஒரு விமானம் தொழில்நுட்ப கோளாறால் பாகிஸ்தானில் தரையிறங்கிய நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.