1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (09:43 IST)

மாணவன் கழுத்தில் பாய்ந்த ஈட்டி! விளையாட்டு போட்டியில் விபரீதம்!

accident
ஒடிசாவில் விளையாட்டு போட்டிகளை காண சென்ற மாணவன் கழுத்தில் ஈட்டி பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் பலாங்கிர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளது. ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல் என பல வகை விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில், அவற்றை காண 9ம் வகுப்பு மாணவன் ஒருவன் அங்கு சென்றுள்ளான்.

அப்போது ஈட்டி எறிதல் போட்டியின்போது குறி தவறி வந்த ஈட்டி ஒன்று திடீரென சிறுவனின் கழுத்தில் பாய்ந்தது. உடனடியாக சிறுவன் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஈட்டி அகற்றப்பட்டு நலமுடன் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஈட்டி குத்தி இருந்தாலும் அதிகமான ரத்தப்போக்கு, ஆபத்தான நிலையை அது ஏற்படுத்தவில்லை என கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K