வியாழன், 6 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 டிசம்பர் 2022 (17:09 IST)

ஜன்னல் வழியாக மாணவியை தூக்கி எறிந்த ஆசிரியை: டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!

classroom
ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர் ஒருவர் முதல் மாடியிலிருந்து ஜன்னல் வழியாக தூக்கி எறிந்த சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
டெல்லியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த மாணவியை முதல் தளத்தில் உள்ள வகுப்பிலிருந்து ஆசிரியை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்தார்
 
 இந்த சம்பவத்தில் மாணவி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக கூறியுள்ளனர். 
 
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஆசிரியையை கைது செய்து அவர் மீது கொலை கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர். வகுப்பறையில் என்ன நடந்தது? ஏன் மாணவியை ஆசிரியை தூக்கி எறிந்தார்? என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பள்ளி வளாகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran